search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவா காங்கிரஸ்"

    கோவா சட்டசபையில் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜ.க.வுக்கு தாவியதால் ஆளும்கட்சியின் பலம் கூடியுள்ளது. #CongressMLAsJoinBJP
    பனாஜி:

    40 இடங்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர்.

    இருப்பினும், அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. 

    23 உறுப்பினர்களின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான அரசின் முதல் மந்திரியாக முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் ஷிரியோட்கர் மற்றும் தயாநந்த் சோப்டே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர். #GoaCongressMLAs  #CongressMLAsJoinBJP
    மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. #PMModi #ForeignTrip #GuinnessWorldRecord
    பனாஜி:

    மோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உள்ளது என சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்தது.

    இந்நிலையில், மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுதொடர்பாக கோவா காங்கிரஸ் செய்தி தொட்ர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். எனவே அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார். #PMModi #ForeignTrip #GuinnessWorldRecord
    ×